மதுரை நகரில் சமீபத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர்கள் சந்திப்பு மாநாட்டில் கவிஞர் பிரபுராஜன் அவர்களை எதார்த்தமாகச் சந்தித்தேன்.மென்பொருள் துறையில்பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விட்டு தற்போது வணிகம் செய்துகொண்டிருப்பதாகச் சொன்னவர் “சொற்களற்ற வேண்டுதல்” எனும் நவீனக் கவிதைகளைஎன்னிடம் வழங்கினார்.சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில் நூலாகமலரவிருக்கிறது என்பதைப் பற்றியும் கூறினார். கவிஞர் பிரபு ராஜன் அவர்களின் நவீனக்கவிதைகள் என்னைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டது. அறுபத்தெட்டு கவிதைகளைஉள்ளடக்கிய மிகச் செறிவான கவிதைத் தொகுப்பாய் மிளிர்கின்றன சொற்கள். தனது பால்ய காலத்து அனுபவங்களைத் திரட்டி களத்துமேட்டில் குமித்திருக்கும்நெல்மணிகளாய் கவிதைகள்பொதிந்து கிடக்கின்றன. சமகாலத்தின் போக்குகளை ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கின்றன. சொற்களின் மாயாஜாலங்கள் இன்னும்கூடுதலாகநூலை வளப்படுத்துகின்றன. கவிஞர் பிரபு ராஜன் கவிதைகளை வாசிக்கிற போது கவிஞர் ஜலாலுதீன் ரூமி தான்நினைவுக்கு வந்தார். ”எது உன்னைஉயிர்ப்புடனும் மகிழ்வுடனும்வைத்திருக்கிறதோஅதனுடன்எப்போதும் பிணைந்திரு ” நூலாசிரியர் கவிதைகளோடு உயிர்ப்புடனும் மகிழ்வுடனும் பிணைந்திருப்பதைக் காணமுடிகிறது. நெல் அவித்த அண்டாவில் இருந்து சோமாறும் போது மணக்கும்நெல்வாடையாய் என் இதயத்தைஇலகுவாக்கி ரசனை செய்ய வைத்த கவிதைகளில் சில கண்ணாடிப்பந்தாய் பனிநனைத்த புல்நுனியில்கண்ணாடிப்பந்தாய் அமர்ந்திருக்கிறேன். ஆட்காட்டிவிரலை வளைத்துபெருவிரலில் இணைத்து சுண்டுகிறாய்பலநூறுவைரக்கற்களாய் தெறிக்கின்றேன்… பனி பெய்த அடர்வனத்தின் விடியல் காட்சியின் படிமங்களை எதார்த்தமாகபுலப்படுத்தியிருக்கிறார். எல்லோரும்காலைப்பொழுதை லயிப்பது இயற்கைதான்.ஆனால்அதனை கவிதைகளுக்குள் உட்படுத்தி அதற்குள்ளிருக்கும் அழகியல் குறியீடுகளைவிவரித்து போகிற போக்கில் வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறார். வினையூக்கிகள் பயணச்சீட்டுசினிமா டிக்கெட்தடுப்பூசி டோக்கன்கள் எனஎல்லா வரிசைகளிலும்அவர்முறை வரும்போதுதீர்ந்துவிடுகிறதுஅந்த பெருநாளின் அதிகாலையில்இறைச்சிக்கடையிலும்நடந்தபோது தான்மலை உச்சியை நோக்கிநடக்க ஆரம்பித்தார்சம்சாரி… வினையூக்கி என்பது ஒரு வினையின் வேகத்தை அதிகரிக்கப் பயன்டுத்துவதை நாம்.ஒருவர் நீண்ட வரிசையில்காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்துவிடுகிறார்.தனக்கான காலம் வரும்வரை காத்திருந்தும் தனக்குகிடைக்கப் போகும்தருணத்தில் மாயமாகி விடுகிறது.இது ஒரு மனிதனுக்கு தொடர்ந்து நடந்து கொண்டேஇருந்தால் என்ன செய்வான்.அவன் மனம் நொந்துஅவ்வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிடுகிறான் என்பதை உணர்த்துகிறது. சாட்சிக்காரர்கள் முழுக்க எரிந்த வீடுஇருளடைந்து கைவிடப்பட்டு நிற்கின்றதுகூடத்தின் கிழக்குசுவரில்மென்காற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றனஇரண்டு வண்ணக்காகிதங்கள் அந்த வீட்டின் கதைப்பக்கங்களில்இருள் மட்டுமே அல்லஇருளின் நுண்ணிய துளைகளில்வண்ணவெளிச்சங்களும் பாய்ந்ததைசாட்சி சொல்ல…கவிஞர் பிரபு ராஜன் ஒரு சித்திரத்தை நம் கண்கள் எதிரே கொண்டு வருகிறார்.முழுக்கஎரிந்த சேதமடைந்த வீடும் அதில் இருளும் வண்ண வெளிச்சங்களும் மோதிக்கொள்ளும்கட்டற்ற வெளிகளின் மாய […]
பேரா.டி.தர்மராஜ் அவர்களின் ஜல்லிக்கட்டு – கிளர்ச்சி எனும் சூழ்ச்சி நூல் பார்வை
‘ஜல்லிக்கட்டு – கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி, பண்பாட்டு மானிடவியல் நோக்கில் அமைந்தது. இனவரைவியலே பிரதானம். இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கும் பொழுது, ஜல்லிக்கட்டை காரணமாக வைத்து தமிழர்களின் இனவரைவியலை எழுதப் போவதாகத் தான் நினைத்திருந்தேன். ஆனால், எழுத எழுதத் தான், இது தமிழர்களின் இனவரைவியல் என்ற எல்லையையும் கடந்து, காளையின் இனவரைவியலாக திரண்டு வருவதை நான் கண்டு கொண்டேன்.
சென்னை புத்தக கண்காட்சி – 2026
புத்தகங்களுடன் , இலக்கியவாதிகளுடன்,பிரபலங்களுடன், புத்தகக் காட்சியை வலம் வருவது மிகவும் அலாதியானது.மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை விட சென்னை புத்தகக் கண்காட்சி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக…. மலர்ந்துள்ளது..
பொருணை அருங்காட்சியம் எனும் வரலாற்றின் உயிர்ப்பூட்டிய கண்ணாடி
“பொருணை” என்பது தாமிரபரணி ஆற்றின் சங்க காலப் பெயர். அந்த ஆற்றின் கரையில் உருவெடுத்த நாகரிகத்தை ஆவணப்படுத்தி, பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் இந்த அருங்காட்சியம் நிறுவப்பட்டுள்ளது.
சிறுகதை : அன்பளிப்பு – கு. அழகிரிசாமி
மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண் விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.
கவிஞர் பிரபுராஜனின் சொற்களற்ற வேண்டுதல் கவிதை தொகுப்பு மதிப்புரை
கவிஞர் பிரபுராஜனின் சொற்களற்ற வேண்டுதல் கவிதை தொகுப்பிற்கு திரு.விஸ்வேஸ்வரன் கனகராஜ் எழுதிய மதிப்புரை. நூல் வெளியீடு : குறள் பதிப்பகம்,சென்னை.
பராசக்தியும் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமும்.
1965 ஜனவரியில், மாணவர்கள் முன்னணியில் இருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினர். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் இது பொதுமக்கள் இயக்கமாக மாறியது.
திராவிட இயக்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு அரசியல் ஆதரவு வழங்கின. “இந்தி திணிப்பு வேண்டாம்”, “தமிழ் எங்கள் உரிமை” போன்ற கோஷங்கள் தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தன.
கவிஞர் சுகுமாரனின் தேர்ந்தெடுத்த சில கவிதைகள்
சாகத் தவறிய மறுநாள்
கடைசி மாத்திரை விழுங்கியதும்
மனம் அலைகளடங்கி அமைதியானது
இறப்பு கருணையுடன் நெருங்கியது
வாசிப்பு எனும் பேரனுபவம்
Cupcake ipsum dolor sit amet liquorice pie caramels. Gummies lemon drops muffin marshmallow dragée icing jelly-o. Marshmallow wafer icing dragée sugar plum jelly-o. Pie fruitcake lollipop toffee.
நோம் சாம்ஸ்கியின் நூல்கள் – சிந்தனையை கிளறும் எழுத்துகள்
நவீன உலக அறிவியல் மற்றும் அரசியல் சிந்தனைகளில் தனித்த இடத்தைப் பிடித்தவர் நோம் சாம்ஸ்கி. மொழியியல் அறிஞராக தொடங்கி, உலக அரசியல், ஊடக அதிகாரம், மனித உரிமைகள் என பல தளங்களில் அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுவதும் வாசகர்களின் சிந்தனைப் பாதையை மாற்றியமைத்துள்ளன. அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அவரது எழுத்துகள் இன்றும் சமகாலப் பொருத்தத்துடன் பேசப்படுகின்றன
