Category: articles

வாசிப்பு : ஈரச்சொற்களின் கவிதைச்சுனை – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி

மதுரை நகரில் சமீபத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர்கள் சந்திப்பு மாநாட்டில் கவிஞர் பிரபுராஜன் அவர்களை எதார்த்தமாகச் சந்தித்தேன்.மென்பொருள் துறையில்பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விட்டு தற்போது வணிகம் செய்துகொண்டிருப்பதாகச் சொன்னவர்  “சொற்களற்ற வேண்டுதல்” எனும் நவீனக் கவிதைகளைஎன்னிடம் வழங்கினார்.சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில்  நூலாகமலரவிருக்கிறது என்பதைப் பற்றியும் கூறினார்.  கவிஞர் பிரபு ராஜன் அவர்களின் நவீனக்கவிதைகள் என்னைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டது. அறுபத்தெட்டு கவிதைகளைஉள்ளடக்கிய மிகச் செறிவான கவிதைத் தொகுப்பாய் மிளிர்கின்றன சொற்கள். தனது பால்ய காலத்து அனுபவங்களைத் திரட்டி களத்துமேட்டில் குமித்திருக்கும்நெல்மணிகளாய் கவிதைகள்பொதிந்து கிடக்கின்றன. சமகாலத்தின் போக்குகளை ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கின்றன. சொற்களின் மாயாஜாலங்கள் இன்னும்கூடுதலாகநூலை வளப்படுத்துகின்றன. கவிஞர் பிரபு ராஜன் கவிதைகளை வாசிக்கிற போது கவிஞர் ஜலாலுதீன் ரூமி தான்நினைவுக்கு வந்தார். ”எது உன்னைஉயிர்ப்புடனும் மகிழ்வுடனும்வைத்திருக்கிறதோஅதனுடன்எப்போதும் பிணைந்திரு ”  நூலாசிரியர் கவிதைகளோடு உயிர்ப்புடனும் மகிழ்வுடனும் பிணைந்திருப்பதைக் காணமுடிகிறது.   நெல் அவித்த அண்டாவில் இருந்து சோமாறும் போது மணக்கும்நெல்வாடையாய் என் இதயத்தைஇலகுவாக்கி ரசனை செய்ய வைத்த கவிதைகளில் சில கண்ணாடிப்பந்தாய் பனிநனைத்த புல்நுனியில்கண்ணாடிப்பந்தாய் அமர்ந்திருக்கிறேன். ஆட்காட்டிவிரலை வளைத்துபெருவிரலில் இணைத்து சுண்டுகிறாய்பலநூறுவைரக்கற்களாய் தெறிக்கின்றேன்… பனி பெய்த அடர்வனத்தின் விடியல் காட்சியின் படிமங்களை எதார்த்தமாகபுலப்படுத்தியிருக்கிறார். எல்லோரும்காலைப்பொழுதை லயிப்பது இயற்கைதான்.ஆனால்அதனை கவிதைகளுக்குள் உட்படுத்தி அதற்குள்ளிருக்கும் அழகியல் குறியீடுகளைவிவரித்து போகிற போக்கில் வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறார். வினையூக்கிகள் பயணச்சீட்டுசினிமா டிக்கெட்தடுப்பூசி டோக்கன்கள் எனஎல்லா வரிசைகளிலும்அவர்முறை வரும்போதுதீர்ந்துவிடுகிறதுஅந்த பெருநாளின் அதிகாலையில்இறைச்சிக்கடையிலும்நடந்தபோது தான்மலை உச்சியை நோக்கிநடக்க ஆரம்பித்தார்சம்சாரி… வினையூக்கி என்பது ஒரு‌ வினையின் வேகத்தை அதிகரிக்கப் பயன்டுத்துவதை நாம்.ஒருவர் நீண்ட  வரிசையில்காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்துவிடுகிறார்.தனக்கான காலம் வரும்வரை காத்திருந்தும்  தனக்குகிடைக்கப் போகும்தருணத்தில் மாயமாகி விடுகிறது.இது ஒரு மனிதனுக்கு தொடர்ந்து நடந்து கொண்டேஇருந்தால்  என்ன செய்வான்.அவன் மனம் நொந்துஅவ்வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிடுகிறான் என்பதை உணர்த்துகிறது. சாட்சிக்காரர்கள் முழுக்க எரிந்த வீடுஇருளடைந்து கைவிடப்பட்டு நிற்கின்றதுகூடத்தின் கிழக்குசுவரில்மென்காற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றனஇரண்டு வண்ணக்காகிதங்கள் அந்த வீட்டின் கதைப்பக்கங்களில்இருள் மட்டுமே அல்லஇருளின் நுண்ணிய துளைகளில்வண்ணவெளிச்சங்களும் பாய்ந்ததைசாட்சி சொல்ல…கவிஞர் பிரபு ராஜன் ஒரு சித்திரத்தை நம் கண்கள் எதிரே கொண்டு வருகிறார்.முழுக்கஎரிந்த சேதமடைந்த வீடும் அதில் இருளும் வண்ண வெளிச்சங்களும் மோதிக்கொள்ளும்கட்டற்ற வெளிகளின் மாய […]

பேரா.டி.தர்மராஜ் அவர்களின் ஜல்லிக்கட்டு – கிளர்ச்சி எனும் சூழ்ச்சி நூல் பார்வை

‘ஜல்லிக்கட்டு – கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி, பண்பாட்டு மானிடவியல் நோக்கில் அமைந்தது. இனவரைவியலே பிரதானம். இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கும் பொழுது, ஜல்லிக்கட்டை காரணமாக வைத்து தமிழர்களின் இனவரைவியலை எழுதப் போவதாகத் தான் நினைத்திருந்தேன். ஆனால், எழுத எழுதத் தான், இது தமிழர்களின் இனவரைவியல் என்ற எல்லையையும் கடந்து, காளையின் இனவரைவியலாக திரண்டு வருவதை நான் கண்டு கொண்டேன்.

நோம் சாம்ஸ்கியின் நூல்கள் – சிந்தனையை கிளறும் எழுத்துகள்

நவீன உலக அறிவியல் மற்றும் அரசியல் சிந்தனைகளில் தனித்த இடத்தைப் பிடித்தவர் நோம் சாம்ஸ்கி. மொழியியல் அறிஞராக தொடங்கி, உலக அரசியல், ஊடக அதிகாரம், மனித உரிமைகள் என பல தளங்களில் அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுவதும் வாசகர்களின் சிந்தனைப் பாதையை மாற்றியமைத்துள்ளன. அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அவரது எழுத்துகள் இன்றும் சமகாலப் பொருத்தத்துடன் பேசப்படுகின்றன

வான் கோவின் தூரிகை – வலியும் ஒளியும் பேசும் ஓவிய மொழி

ஓவிய வரலாற்றில் சில கலைஞர்கள் காலத்தைத் தாண்டி பேசுகிறார்கள். அவர்களில் ஒருவர் வின்செண்ட் வான் கோ. அவரது ஓவியங்களை விடவும், அவற்றை உருவாக்கிய தூரிகையின் இயக்கம் தான் இன்றும் கலை உலகை அசைத்துக் கொண்டிருக்கிறது. வான் கோவின் தூரிகை, அழகை மட்டும் வரையவில்லை; அது மனித மனத்தின் வலி, தனிமை, துடிப்பு ஆகியவற்றை நேரடியாக கேன்வாஸில் பதித்தது.

Back To Top