தமிழகத்தின் அறிவுசார் அடையாளமாக திகழும் சென்னை புத்தகக் கண்காட்சி 2026, வழக்கம்போல் இந்த ஆண்டும் புத்தகப் பிரியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிரமாண்டமாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றுகூடும் இந்த அறிவுத் திருவிழா, தமிழின் வளர்ச்சிக்கும் வாசிப்பு பண்பாட்டின் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இலக்கியம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, குழந்தைகள் இலக்கியம், போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல முன்னணி பதிப்பகங்களுடன், சிறு பதிப்பாளர்களுக்கும் தனி கவனம் வழங்கப்பட்டுள்ளது.
கண்காட்சியின் சிறப்பு அம்சமாக தினமும் நடைபெறும் எழுத்தாளர் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், இலக்கிய கருத்தரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கான வாசிப்பு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை சென்னை புத்தக கண்காட்சியில் களத்துமேடு தளத்தின் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வெளியிட்டுள்ளனர். திரு முத்துபாண்டி அவர்களின் குறள் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்.
கவிஞர் மாமருதன் ஜீவாவின் நெகிழியாய் நெஞ்சுக்குள் நீ ஸ்டால் 232ல் கிடைக்கும்

குறள் பதிப்பகத்தின் படைப்புகள் பல்வேறு அரங்குகளில் கிடைக்கும்.

