சென்னை புத்தக கண்காட்சி – 2026

இன்று தொடங்குகிறது சென்னை புத்தகக் கண்காட்சி.

புத்தகங்களுடன் , இலக்கியவாதிகளுடன்,பிரபலங்களுடன், புத்தகக் காட்சியை வலம் வருவது மிகவும் அலாதியானது.மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை விட சென்னை புத்தகக் கண்காட்சி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக…. மலர்ந்துள்ளது..

இந்த ஆண்டில் நம் படைப்பாளிகளை அவர்களின் நூல்களை கவனம் பெற செய்வோம்.காலையில் எழுத்தாளர் ஆ திருநாவுக்கரசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன் என்ன ஒரு அற்புதமான ஆளுமை.கவிதை நாவல் இரண்டிலும் நுட்பமான விஷயங்களை உரையாடுவதில் ஈடுபாடு உடையவர்.

அவர் எழுதிய நாவலான “சாந்தி வனத்து வேர்கள்” சாகித்திய அகடமியின் பரிந்துரை பட்டியலில் இருந்ததை கூறினார்.அவரின் காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும் என்கிற நாவல் பல்கலைக்கழகங்களில் பாடமாக்கப்பட்டுள்ளது என்பதையும் விவரித்தார்.பாரதியைப் பற்றி ஒரு சிறப்பான கவிதையை தான் கவியரங்கத்தில் வாசித்த கவிதையை வாசித்துக் காட்டினார்.பாரதியை நெபுலாவாக காட்டுகிறார்.அது வெடித்து சிதறிய நட்சத்திரங்களாக அவருக்கு பின்னர் தோன்றிய கவிஞர்களை பாவித்து பாடுகிறார்.
பராசக்தியிடம் இறைஞ்சியவனல்ல பாரதி. சிறந்த கவிஞர்

நாவலாசிரியர் ஆ திருநாவுக்கரசனின் “காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும்”என்கிற புத்தகத் தினை கவனம் பெறச் செய்வோம்…

இந்த வருடம் நாம் கவனிக்க வேண்டிய புத்தகங்களில் வரிசை….

 1.⁠ ⁠சோ.தர்மன் – சினவயல்

 2.⁠ ⁠டி. தர்மராஜ் – ஜல்லிக்கட்டு

 3.⁠ ⁠அரங்க மல்லிகா-மணிமேகலை பௌத்த பேரரறம்

 4.⁠ ⁠பிரபுராஜன்-சொற்களற்ற வேண்டுதல்

 5.⁠ ⁠மாமருதன் ஜீவா-நெகிழியாய் நெஞ்சுக்குள் நீ

 6.⁠ ⁠திருநாவுக்கரசன்-காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும்

 7.⁠ ⁠லாரா ஹோப்பா-சுதந்திரத்தின் நிழல்

 8.⁠ ⁠ராபர்ட் சந்திரகுமார்-மாஞ்சோலை

 9.⁠ ⁠லியோ ஜோசப் -போர் பறவைகள்

10.⁠ ⁠நரேஷ் வேல்சாமி-சமூகம் சார் கொள்ளையர்கள்

11.⁠ ⁠பால கங்காதரன்-இயேசு கிறிஸ்துவும் சித்தர்களும்

— விஸ்வேஸ்வரன் கனகராஜ்

 

Back To Top