நூலகங்களுக்குள் நாம் புத்தக அடுக்களுக்குள் பயணிக்கும்போது இதை உணர்ந்திருப்போம்.தரமான நூல்களுக்கு இடையில் தரமற்ற நூல்கள், அவசரமாக எழுதப்பட்ட நூல்கள், சில காரணங்களை முன்னிட்டு அச்சிடிக்கப்பட்ட நூலகங்கள், நூல்கள் எனப் பல வகை இருப்பதைப் பார்க்கலாம்.
சமீபத்தில், பெரியார் அறிவியல் குறித்த சர்ச்சை மிக மோசமான எதிர்வினைகளை உருவாக்கி வருகின்றது.எழுத்தாளர் பெருமாள் முருகன் சமீபத்தில் பெரியார் அறிவுலகம் சென்று சில நூல்களை ஆராய்ந்ததில், அவை பெரும்பாலான தரமற்ற போலியான நூல்கள் வாங்கப்பட்டிருப்பதை பார்க்கிறார். அதிர்ச்சியடைந்த அவர் ஒரு இணையதளத்தில் அதைப்பற்றி எழுதுகிறார்.
உடனே தீப்பிடித்துக் கொள்கின்றது ஊடகமும்,சமூக வலைத்தளங்களும்.சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது எப்படி உருவானது? இதற்கெல்லாம் யார் காரணம்?
இப்போது இது அரசியல் அரசியல்மயமாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகள் என மாறி மாறி அறிக்கைகள் கொடுப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இந்த நிகழ்வுக்கு நாம் சிறிது அச்சப்படத்தான் வேண்டும். இதுபோன்ற அறிவியக்கத்தில் நுழையும் பொய்மைகள், அந்த அறிவியக்கத்தையே முடக்கிவிடக்கூடிய ஆபத்துகள் உண்டு. இப்போது அரசியல்மயமாக்கப்பட்டு இந்த பிரச்சனை வேறொரு தளத்திற்கு செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இந்த நிகழ்வுக்கு நாம் சிறிது அச்சப்படத்தான் வேண்டும்.
அந்த நூல்களை எப்படி, யார் அனுப்பியது? எதற்காக அந்த ஆணைகள் கொடுக்கப்பட்டன? எப்படிப்பட்ட பின்னணியில் அவை அச்சிடப்பட்டன, எந்தவிதமான சரிபார்ப்பும் இன்றி அவை எப்படி நூலக அடுக்குகளுக்குப் போனது என்பவையும் விசாரிக்கப்பட வேண்டும்.
எல்லா மட்டங்களிலும் தவறு நடந்திருக்கிறது. பல நூல்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன்(GEN AI), உதவியுடன் சம்பந்தமில்லாத சொற்களைக் கொண்டு அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தலைப்பிற்கும்,புத்தகத்திற்கு உள்ளே உள்ள பொருளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல், மிக மோசமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்கள் ஊழல் மற்றும் இரக்கமற்ற வணிகத்தின் அடையாளங்கள். விசாரணைக்குறிய ஆவணங்களை கைப்பற்றிய பிறகு, அந்த நூல்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்,பின் அழிக்கப்படவேண்டும்.
இதை ஒரு படிப்பினையாக நாம் கொள்ள வேண்டும். சமூகத்தில் அனைவரும் இதற்கான எதிர்வினைகளையும் வெளிப்படுத்தும்போதுதான், இதுபோன்ற தவறுகள் அடுத்தடுத்து நடக்காமல் கவனமாக இருக்க முடியும்.

– பிரபுராஜன்
